Category: இந்தியா

  • இனி எந்த வயதிலும் சட்ட படிப்பு படிக்கலாம்: இந்திய பார் கவுன்சில்

    இனி எந்த வயதிலும் சட்ட படிப்பு படிக்கலாம்: இந்திய பார் கவுன்சில்

    இந்திய பார் கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, இனி எந்த வயதை சேர்ந்தவர்களும் வயது வரம்பின்றி சட்ட படிப்பில் சேர்ந்து படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பிற்கு 20 வயதும், 3 ஆண்டு சட்டப் படிப்பிற்கு 30 வயதும் அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து 2016-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு

    அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு

    அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாகவும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆயுதப் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சுப்ரமணி, “இன்று இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் நமது அக்னி வீரர்களுக்கும் மிக முக்கியமான நாளாகும். அனைத்து அக்னி வீரர்களும் இந்திய ராணுவத்தில் நிரந்தரமாகச் சேருவதற்கான வழிவகையை மத்திய அமைச்சரவை உருவாக்கி உள்ளது.

    அக்னிபாத் திட்டம் ஜூன் 14, 2022-ல் தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது, அக்னி வீரர்களின் செயல்பாடு தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படும் என்றும், இத்திட்டம் அவ்வப்போது மறுஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது முதல் தொகுதியைச் சேர்ந்த அக்னி வீரர்களின் நான்கு ஆண்டு பணிக்காலம் முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.

    இந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாட்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் அவர்களின் பணித்திறன் குறித்து மிகவும் நேர்மறையான கருத்துக்கள் கிடைத்துள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தகுதியின் அடிப்படையில் 25 சதவீத அக்னி வீரர்கள் வழக்கமான ராணுவ படைகளில் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.

    மீதமுள்ள 75 சதவீத அக்னி வீரர்கள் ஒழுக்கமான, ஊக்கமுள்ள இளைஞர்களாக மீண்டும் சமூகத்துக்கு திரும்புவார்கள் என்று ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திருத்தப்பட்ட இந்த திட்டத்தின்படி, அந்த 75 சதவீத அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படும். இந்த 2 ஆண்டு காலம் முடிந்த பிறகு, விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் ஆயுதப் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என தெரிவித்தார்.

    2022ல் அக்னி வீரர்கள் ஆயுதப்படைகளில் சேர்க்கப்பட்டபோது, அவர்களின் பணிக்காலம் குறைவாக இருப்பது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. பிஹாரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களையும் நடத்தினர். அக்னி வீரர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவை இத்திட்டத்தில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

    சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

    உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகம் முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்தக் கடிதத்தின் விவரம்: ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 130, ‘உச்ச நீதிமன்றம் டெல்லியிலோ அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்தியத் தலைமை நீதிபதி அவ்வப்போது முடிவுசெய்யும் பிற இடத்திலோ அல்லது இடங்களிலோ அமைந்திருக்க வழிவகை செய்கிறது.’

    இந்தக் கோரிக்கையானது, 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டின் ஒரு விவாதப் பொருளாகவும் இருந்தது. தென்னிந்தியாவில் உள்ள வழக்காடிகள் தங்கள் நீதிசார் தீர்வுகளுக்காக புதுடெல்லி வரை செல்ல வேண்டியுள்ளது.

    தென்னிந்தியாவின் முக்கிய பெருநகரமாக விளங்கும் சென்னையில், இக்கிளையை அமைப்பது, அனைத்து தென்மாநிலங்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.

    சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் குழுமமானது, மிக்க சட்ட அறிவும், வாதத்திறமையும் கொண்ட சட்ட வல்லுநர்களைக் கொண்டுள்ளதால், சென்னையில் அமைக்கப்படும் உச்ச நீதிமன்றக் கிளையின் தேவைகளை நிறைவு செய்யும்.

    சென்னை உயர் நீதிமன்றமானது 1862-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட நாட்டின் மிகத் தொன்மையான முன்னுரிமை உயர்நீதிமன்றங்களில் ஒன்றானது என்பது குறிப்பிடத்தக்கது.

    உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவித் தரத்துக்கு இணையான குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் தவறாமல் மாநில அரசு வழங்கும்.

    07.08.2007 அன்று உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு இப்பொருண்மை குறித்த தனது முந்தைய தீர்மானங்களிலிருந்து மாறுபடுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என முடிவெடுத்துள்ள நிலையையும், நமது அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, ஏழை – பணக்காரர் என்ற பாகுபாடின்றி நாட்டின் அனைத்துக் குடிமக்களும் நீதிமன்றத்தை நேரடியாக அணுகும் வாய்ப்பைப் பெறவேண்டும் என்றே அதனை உருவாக்கிய சான்றோர்கள் விரும்பினர்.

    பல நாடுகளில் இல்லாத சிறப்பம்சமான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 32 இயற்றப்பட்டதற்கான முதன்மைக் காரணமும் இதுவே. நாளடைவில், பிரிவு 32-ன் கீழான தீர்வானது, புவியியல் ரீதியாக இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு அருகில் வசிக்கக் கூடியவர்கள் மற்றும் வழக்குச் செலவுகளையும், பயணச் செலவுகளையும் பொருட்டாகக் கருதாதவர்களுக்கு மட்டுமே நடைமுறையில் சாத்தியமான ஒன்றாக மாறியுள்ளது.

    இதனால், குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள குடிமக்கள் இச்சலுகையைப் பெறும் வாய்ப்பை புதுடெல்லிக்கும், தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையே உள்ள நெடுந்தொலைவு காரணமாகவே இழக்க நேரிடுகிறது.

    உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிப்பேராணை (சிவில்) எண்.36/2016 (வி.வசந்தகுமார் – எதிர் – எச்.சி.பாட்டியா மற்றும் சிலர்) வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் 13.07.2016 அன்று பிறப்பித்த உத்தரவில், எழுப்பப்பட்ட சட்ட ரீதியான கேள்விகளில், உச்ச நீதிமன்றத்தின் அமர்வை அமைப்பது என்பதும் ஒன்றாகும்.

    இவை குறித்து, ஓர் உறுதியான முடிவைப் பெறுவதற்காக அரசியலமைப்பு அமர்வு ஒன்று அமைப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, இவ்வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, தென்னிந்திய மாநிலங்களில், சென்னையின் முக்கியத்துவத்தையும், தமிழ்நாடு மாநிலத்தின் நீண்டகாலக் கோரிக்கை மற்றும் காரணங்களைக் கருத்தில் கொண்டு, சென்னையில் உச்ச நீதிமன்ற அமர்வை அமைப்பது குறித்த இந்திய உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, சாதகமான முடிவைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளையை அமைப்பது நமது நாட்டின் உண்மையான கூட்டாட்சித் தன்மையை வெளிப்படுத்தும். 2004, 2006, 2008 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் இவை தொடர்பாக அளித்த பரிந்துரைகள், உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர மண்டலக் கிளைகளின் தேவையைத் தொடர்ந்து வலியுறுத்தும் சட்ட ஆணையங்களின் அறிக்கைகள் மற்றும் இத்தகைய கிளைகளின் முழுமையான நிர்வாகக் கட்டுப்பாடு இந்தியாவின் தலைமை நீதிபதியிடமே உள்ளதால், அவை நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்காது’ என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

     

     

  • இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி – டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்

    இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி – டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்

    புது டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி இன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக 14 ஆயிரம் துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் முறைகேடுகளுக்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இண்டியா கூட்டணியினர் இன்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர்.

    ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இண்டியா கூட்டணியின் பேரணிக்காக ‘சலோ டெல்லி’ (டெல்லி நோக்கிச் செல்வோம்) என்று முழக்கமிடும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்புப் பணிக்காக 14 ஆயிரம் துணை ராணுவம் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ‘ஸ்டூடண்ட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா’ (SFI) அமைப்பும் இந்தப் பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளது.

    இண்டியா கூட்டணியின் பேரணியை முன்னிட்டு, இன்று மத்திய டெல்லியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பேரணிக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையிலேயே டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் பல்வேறு கூட்டணி கட்சிகளின் ஆதரவாளர்கள் திரளத் தொடங்கினர். தலைநகரின் பிற பகுதிகளிலும் கட்சிகளின் தொண்டர்கள் ஒன்று கூடினர்.

    சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் இல்லத்திற்கு வெளியே கூடினர். காங்கிரஸ் ஆதரவாளர்கள் இமாச்சல பவனுக்கு வெளியே ஒன்றுகூடி, அங்கிருந்து பேரணி நடைபெறும் இடத்திற்குப் புறப்பட்டனர். இந்த போராட்டத்திற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து தங்கள் கட்சித் தொண்டர்களை அந்தந்த கட்சிகள் திரட்டி வந்துள்ளன.

    ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள இண்டியா கூட்டணியின் பேரணிக்காக, மத்திய டெல்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள், வாகன வழித்தட மாற்றங்கள் மற்றும் பேருந்து வழித்தட மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பேரணி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், மாற்று வழிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து குறித்த அறிவிப்புகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

     

     

  • கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

    கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

    சென்னை, அக். 31–
    கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் இந்தியர் தானா என்பது குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சி.ஜே.பி., எனும் கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ், இந்தியர் தானா என்பது குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட கோரி, சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    மனு விபரம்:
    மத்திய அரசு நடத்தும்விசாரணையில், சவுரவ்தாஸ் நேபாளி என தெரியவந்தால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை ரத்து செய்ய வேண்டும்.
    நீதித்துறை குறித்தும், குறிப்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும், அவதுாறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். எனவே, அவருடைய சமூக வலைதள கணக்குகளை முடக்க வேண்டும்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி,நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
    அப்போது, மனுதாரர்தரப்பில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் ஆஜராகி, ‘இது தொடர்பாக, மத்திய அரசுக்கு புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என தெரிவித்தார்.
    இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

  • நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளை இலவசமாக பராமரிக்க தயார்: பிரதாப் சி ரெட்டி தகவல்

    நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளை இலவசமாக பராமரிக்க தயார்: பிரதாப் சி ரெட்டி தகவல்

    விக்​சித் பாரத் திட்​டத்​தின் ஒரு பகுதி​யாக நாடு முழு​வதும் உள்ள அரசு மருத்​து​வ​மனைகள், ஆரம்ப சுகாதார மையங்​களை இல​வச​மாக பராமரிக்க தயாராக இருப்பதாக அப்​போலோ குழும தலை​வர் பிரதாப் சி ரெட்டி தெரி​வித்​தார்.

    அப்​போலோ மருத்​துவ குழு​மத்​தின் தலை​வர் பிரதாப் சி ரெட்டி ஆந்​திர மாநிலம், சித்​தூர் மாவட்​டத்​தில் உள்ள அவரது சொந்த ஊரான அரகொண்​டாவில் நிறு​வப்​பட்​டுள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யின் சாதனையை பாராட்டி பேசினார். தனது சொந்த ஊர் மக்​களுக்​காக கடந்த 2000-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த மருத்​து​வ​மனை​யில் இது​வரை 1,000 பேருக்கு மூட்டு அறுவை சிகிச்​சைகள் செய்து சாதனை படைத்​துள்​ள​தாக அவர் தெரிவித்தார்.

    மேலும், அவர் பேசிய​தாவது: இந்த குக்​கிராமத்​தில் பிறந்து வளர்ந்த நான், மக்​களுக்கு மருத்​துவ துறை​யில் சேவை செய்ய வேண்​டும் எனும் உயர்ந்த நோக்​கத்​தில் அப்​போலோ மருத்​து​வ​மனையை தொடங்​கினேன்.

    தற்​போது 200-க்​கும் மேற்​பட்ட மருத்​து​வ​மனைகள் உள்​ளன. 7 மருத்​துவ கல்​லூரி​கள், சித்​தூரில் அப்​போலோ பல்​கலைக்​கழகம், செவி​லியர் பயிற்சி கல்​லூரி உள்ளிட்ட​வை​கள் அமைக்​கப்​பட்​டன.

    மேலும் சித்​தூர் அரசு மருத்​து​வ​மனையை 33 ஆண்​டுகள் ஒப்பந்தத்​துக்கு எடுத்து, தற்​போது 650 படுக்கை வசதி கொண்ட அதிநவீன மருத்​து​வ​மனையாக இது செயல்​பட்டு வரு​கிறது. முதல்வர் சந்​திர​பாபு நாயுடு இதற்கு கடந்த 10 ஆண்​டுகளுக்கு முன் அனுமதி வழங்​கினார். இங்கு இல​வச​மாக மக்​கள் மருத்​துவ வசதியை பெற்று வரு​கின்​றனர். ஆரோக்​கிய​மான இந்​தியா என்பது பெரு நகரங்​களில் மட்​டுமல்​லாது குக்​கிராமங்​களி​லும் கட்டமைக்​கப்​பட வேண்​டும் என்​பதே என் கருத்து.

    சுகாதா​ர​மான இந்​தி​யா​வுக்​காக விக்​சித் பாரத் திட்​டத்​தின் கீழ் அப்​போலோ தனது சேவையை நாடு முழு​வதும் அமல்​படுத்த நினைக்​கிறது. இது தொடர்​பாக நான் பிரதமர் நரேந்​திர மோடியை சந்​தித்து 2 திட்​டங்​களை முன்வைத்​தேன்.

    அதில் முதலா​வது, வெளி​நாட்​ட​வர்​கள், அல்​லது வெளி​நாடு வாழ் இந்தியர்​கள், நம் நாட்​டுக்கு வரும்​போது, மருத்​துவ பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை போன்​றவற்றை அப்​போலோவில் எடுத்து கொள்​ளும் பட்சத்​தில் அவர்​களுக்கு விரைந்து மருத்​துவ சேவையை செய்து தரு​வோம். அடுத்​த​தாக, விக்​சித் பாரத்திட்​டத்​தின் ஒரு பகுதி​யாக நாடு முழு​வதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்​களை அப்​போலோவுக்கு சில ஆண்​டுகள் ஒப்​பந்த அடிப்​படை​யில் வழங்கினால், அவற்றை நவீனப்​படுத்தி, மக்​களுக்கு இல​வச​மாக சிறந்த மருத்​துவ சேவையை வழங்​கு​வோம். இவ்​வாறு அவர் பேசினார்.

     

     

  • உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்து – பயணித்த 6 பேரும் உயிரிழப்பு

    உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்து – பயணித்த 6 பேரும் உயிரிழப்பு

    பத்ரிநாத்தில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தபோது காணாமல் போன ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் இறந்துவிட்டதாக உத்தராகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

    உத்தராகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீக் ஜெயின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி வாயிலாக இதனை தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், ‘டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர் பத்ரிநாத் கோயிலில் இருந்து டேராடூனில் உள்ள சகஸ்தரதாரா ஹெலிபேடுக்குச் சென்று கொண்டிருந்தபோது, சமோலி மாவட்டத்தின் ஹாத்தி பர்வதம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில், விமான மற்றும் ஐந்து பயணிகள் என மொத்தம் ஆறு பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் விபத்தில் உயிரிழந்துவிட்டனர்’ என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க, போலீஸார், மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம் ஆகியவை அடங்கிய இரண்டு குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

    இந்த ஹெலிகாப்டரை டெல்லியைச் சேர்ந்த கேப்டன் ஹிமான்ஷு சபர்வால் இயக்கியுள்ளார். இதில், பிரதாபா, அருண், சங்கர் கவுடா, சுதிர் கே, ஹெச்.எஸ்.நடராஜா ஆகிய பயணிகள் பயணித்துள்ளனர். பயணிகள் அனைவரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • PM கிசான் 24-வது தவணைத்தொகையை நாளை விடுவிக்கும் பிரதமர் மோடி

    PM கிசான் 24-வது தவணைத்தொகையை நாளை விடுவிக்கும் பிரதமர் மோடி

    விவசாயிகளுக்கான PM கிசான் திட்டத்தின் 24-வது தவணை தொகைய ரூ.2000-த்தை குஜராத்தின் பில்டி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை (அக்.29) விடுவிக்கிறார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 9 கோடியே 34 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.18 ஆயிரத்து 680 கோடி நேரடி பணப்பரிமாற்றம் மூலம் செலுத்தப்படவுள்ளது. குஜராத்தில் இருநாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர், அம்மாநிலத்தை சேர்ந்த 52.33 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,051 கோடி தவணை தொகையை வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

  • 20 கி.மீ. சுற்றளவில் வசிப்போருக்கு ரூ.1,500-ல் வருடாந்திர சிறப்பு பாஸ்: நவ.1 முதல் சுங்கக் கட்டண சலுகை அமல்

    20 கி.மீ. சுற்றளவில் வசிப்போருக்கு ரூ.1,500-ல் வருடாந்திர சிறப்பு பாஸ்: நவ.1 முதல் சுங்கக் கட்டண சலுகை அமல்

    சுங்கச் சாவடியி​லிருந்து 20 கி.மீ. தொலை​வுக்​குள் வசிக்​கும் வாகன உரிமை​யாளர்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.1,500 கட்டணத்​தில் சிறப்பு பாஸ் வழங்​கப்​படும் என மத்​திய அரசு அறிவித்​துள்​ளது.

    நாடு முழு​வதும் தேசிய நெடுஞ்​சாலை சுங்​கச்​சாவடிகளுக்கு அரு​கில் வசிக்​கும் மக்​களுக்​காக, மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத்​துறை அமைச்​சகம் ஒரு புதிய சலுகையை அறி​வித்​துள்​ளது. இதன்​படி, சுங்​கச் சாவடியி​லிருந்து 20 கி.மீ. தொலை​வுக்​குள் வசிக்​கும் தகு​தி​யுள்ள தனி​யார் வாகன உரிமை​யாளர்​கள், ஆண்​டுக்கு ரூ.1,500 கட்​ட​ணத்​தில் சிறப்பு பாஸ் பெற்​றுக்​கொள்​ளலாம். இது தொடர்​பாக தேசிய நெடுஞ்​சாலைக் கட்டண விதி​களில் திருத்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த புதிய விதி​கள் நவம்​பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    யார் தகு​தி​யானவர்​கள்?

    திருத்​தப்​பட்ட விதி​களின்​படி, செல்​லுபடி​யாகும் ‘பாஸ்​டேக்’ கணக்கு​களைக் கொண்ட, தகு​தி​யுள்ள வணி​கம் அல்​லாத வாகனங்​களுக்கு மட்​டுமே இந்த சிறப்பு பாஸ் வழங்​கப்​படும். வாகன உரிமை​யாளர்​கள் திருத்​தப்​பட்ட விதி​களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்​தனை​களை​ பூர்த்தி செய்ய வேண்​டும். இந்த சிறப்பு பாஸ், அது வழங்​கப்​பட்ட குறிப்​பிட்ட சுங்கச்சாவடிக்கு மட்​டுமே செல்​லுபடி​யாகும்.

    சுங்​கச்​சாவடி​யானது நகராட்சி அல்​லது உள்​ளூர் நகர எல்லைகளுக்​குள் அமைந்​துள்​ளதா அல்​லது வெளியே அமைந்துள்ளதா என்​ப​தைப் பொறுத்​து, அரசு 2 வரு​டாந்​திரக் கட்டணங்​களை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. அதன்​படி, நகராட்சி அல்​லது உள்​ளூர் நகர எல்​லைகளுக்கு வெளியே அமைந்​துள்ள சுங்​கச்​சாவடிகளுக்கு அரு​கில் வசிக்​கும் வாகன உரிமையாளர்கள் ஆண்​டுக்கு ரூ.1,500 செலுத்த வேண்​டும். நகராட்சி அல்​லது உள்​ளூர் நகர எல்​லைக்​குள் அமைந்​துள்ள சுங்கச்​சாவடிகளுக்​கு, சிறப்பு பாஸ் கட்​ட​ணம் ரூ.3,000 ஆகும்.

    மூடிய பயனர் கட்டண வசூல் முறை​யின் கீழ் இயங்​கும் தேசிய நெடுஞ்​சாலைகள் அல்​லது விரைவுச்​சாலைகளில் இந்த வசதி கிடைக்​காது. மேலும், சேவைச் சாலை அல்​லது மாற்​றுச்​ ​சாலை பயன்​​பாட்​டுக்​கு கிடைக்​கும்​ இடங்​களில்​, ​வாகன உரிமையாளர்கள்​ இத்​திட்​டத்​துக்​கு தகு​தி பெற ​மாட்​​டார்​கள்​.

     

  • இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்

    இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்

    அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே கடந்த ஜூலை மாதம் முதல் நேரடி மோதல்கள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பரில் டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் வந்திருந்தபோதும் மோதல்கள் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோதல்கள் இன்னும் நீடிப்பதாக இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் சத்ருஜித் சிங் கபூர் தெரிவித்துள்ளார்.