Blog

  • ‘ராமாயணா’ காட்சிகளை இணையத்தில் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை

    ‘ராமாயணா’ காட்சிகளை இணையத்தில் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை

    நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படத்தை திரையரங்குகளில் சட்டவிரோதமாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்வோர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானதைத் தொடர்ந்து, திரையரங்குகளுக்குள் வைத்து எடுக்கப்பட்ட ஏராளமான காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாகப் பரப்பப்பட்டு வருவதாக தயாரிப்புக் குழுவின் கவனத்திற்கு வந்துள்ளது.

    இதுகுறித்துத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

    வணிகசார் அறிவுசார் சொத்துரிமை வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 2 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவுகளின்படி, ‘ராமாயணா’ திரைப்படத்தையோ அல்லது அதன் எந்தவொரு பகுதியையோ அனுமதியின்றி பதிவு செய்வதோ, பதிவேற்றம் செய்வதோ அல்லது பிறருக்குப் பகிர்வதோ முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

    அனுமதியின்றித் திரைப்படக் காட்சிகளைப் பகிர்வது காப்புரிமைச் சட்டம் 1957, திரையரங்கச் சட்டம் 1952, பாரதிய நியாய சன்ஹிதா 2023, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 ஆகியவற்றின் கீழ் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றவியல் செயலாகும் என்றும், இது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    திரையரங்குகளில் படத்தைப் பதிவு செய்வதைத் தவிர்க்குமாறும், ஏற்கனவே இணையத்தில் பதிவிடப்பட்ட திருட்டுத்தனமான காணொளிகளை உடனடியாக நீக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை மீறிச் செயல்படுபவர்கள் மீது எந்தவித முன்அறிவிப்புமின்றி சிவில், குற்றவியல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இணையத் தளங்கள் மூலம் காவல்துறைக்குத் தெரிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

     

  • ஈரான் போர் இன்னும் முடியவில்லை: இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை

    ஈரான் போர் இன்னும் முடியவில்லை: இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை

    ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், அணுஆயுதம் தயாரிக்கும் முயற்சியை ஈரான் புதுப்பித்து வருவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    1956-ஆம் ஆண்டு சினாய் போரில் உயிரிழந்த இஸ்ரேல் வீரர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், “ஈரானைப் பொறுத்தவரை நமது லட்சியப் பணி இன்னும் நிறைவடையவில்லை. இஸ்ரேல் அரசுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஈரான் மீண்டும் அணுஆயுதம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.

    இருப்பினும், அணுஆயுதம் தயாரிக்கும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மறுத்து வரும் ஈரான், தனது அணுசக்தித் திட்டங்கள் அனைத்தும் அமைதிப் பயன்பாட்டுக்கானவை மட்டுமே என்று வலியுறுத்தி வருகிறது.

    லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள காட்ஸ், ஈரானுடன் சேர்ந்து இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றால் ஹிஸ்புல்லா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், காசா, லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள பாதுகாப்புப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ் பெறப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 27 பொதுத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து, புதிய ஆட்சி அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டுக்கு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சூழலில், நெதன்யாகு தனது சுய அரசியல் தேவைகளுக்காக ராணுவத்தைப் போரில் ஈடுபடுத்தக் கூடாது என ஐசன்கோட் எச்சரித்துள்ளார்.

     

  • ராமர் கோயில் நன்கொடை திருட்டு: யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்? – அகிலேஷ் கேள்வி

    ராமர் கோயில் நன்கொடை திருட்டு: யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்? – அகிலேஷ் கேள்வி

    “அயோத்தி – ராமர் கோயில் நன்கொடை திருட்டு குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்?” என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார்.

    கடந்த 1990-ல் அயோத்தியில் கர சேவகர்கள் மீது உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தப்பட்டது. அதற்கு காரணமானவர்கள் டிசம்பரில் அயோத்திக்கு வருகை தர திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அயோத்திக்கு வருவதற்கு முன் கர சேவகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை அன்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் தெரிவித்திருந்தார்.

    அகிலேஷ் யாதவ் பெயரை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக யோகி ஆதித்யாநாத் விமர்சித்திருந்தார். இந்நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் அகிலேஷ் இப்போது பேசியுள்ளார்.

    “ராமர் கோயில் நன்கொடை திருட்டில் ஈடுபட்டவர்களை அரசு காத்து வருகிறது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் அது இந்த விவகாரத்தில் தோல்வி கண்டுள்ளது. இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்? இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?

    வளர்ச்சி என்ற பெயரில் அயோத்தியில் கைப்பற்றப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு கூட கிடைக்கவில்லை. மக்கள் அதனால் விரக்தி அடைந்துள்ளனர்” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, கடந்த சனிக்கிழமை அன்று யோகி ஆதித்யநாத் கூறியதாவது; “பகவான் ராமரின் பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மற்றும் தடியடி மேற்கொண்டவர்கள் அயோத்திக்கு வரலாம். அதற்கு முன் அவர்கள் ராம பக்தர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

    கடந்த 1990 சம்பவத்தை அவர் குறிப்பிட்டு இருந்தாலும் அப்போது ஆட்சியில் இருந்த முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர்) குறித்தும், அதன் தலைவர்கள் குறித்தும் யோகி ஆதித்யநாத் பேசவில்லை. அப்போது ஜனதா தளம் கட்சி அம்மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது. அதன் பின்னர் 1992-ல் சமாஜ்வாதி கட்சியை முலாயம் சிங் யாதவ் நிறுவினார்.

    அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்​தர்​கள் அளிக்​கும் நன்​கொடை, காணிக்கை பணம் திருடப்​படு​வ​தாக புகார்​கள் எழுந்​தன. சுமார் ரூ.200 கோடி வரை மோசடி செய்​யப்​பட்​டிருப்​ப​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது. இதுதொடர்​பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு சார்​பில் கடந்த ஜூன் 15-ம் தேதி சிறப்பு புல​னாய்வு குழு (எஸ்​ஐடி) நியமிக்​கப்​பட்​டது.

    இந்த விசாரணை குழு, இது தொடர்பான அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய 8 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அறக்கட்டளையின் நிர்வாகிகள் ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது.

  • ஆந்திர கடல் பகுதியில் மாயமான 9 மீனவர்களும் சடலங்களாக மீட்பு – கடைசியாக இருவரின் உடல்களும் கரை ஒதுங்கின

    ஆந்திர கடல் பகுதியில் மாயமான 9 மீனவர்களும் சடலங்களாக மீட்பு – கடைசியாக இருவரின் உடல்களும் கரை ஒதுங்கின

    காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று மாயமான 9 மீனவர்களில், 7 பேரின் உடல்கள் ஏற்கெனவே கரை ஒதுங்கிய நிலையில், மேலும் இருவரின் உடல்களும், ஆந்திர மாநிலம் கொத்தப்பட்டினம் அருகே கரை ஒதுங்கின. இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி, செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், படகு ஓட்டுநர் சூர்யா உள்ளிட்ட 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். ஆந்திர மாநிலம், நிஜாம்பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, புயல் எச்சரிக்கை காரணமாகப் பாதுகாப்பு கருதி நிஜாம்பட்டினம் துறைமுகத்தில் விசைப்படகை அவர்கள் நிறுத்தியுள்ளனர்.

    இதையடுத்து, மீண்டும் அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் விசைப்படகின் எஞ்சின் திடீரென பழுதடைந்துள்ளது. இதுகுறித்து, அருகில் இருந்த மற்றொரு விசைப்படகிற்கு கடந்த 3-ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அந்த 9 மீனவர்களையும் தொடர்புகொள்ள முடியாமல் போனது.

    காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று மாயமான 9 மீனவர்களில், 7 பேரின் உடல்கள் ஏற்கெனவே கரை ஒதுங்கிய நிலையில், மேலும் இருவரின் உடல்களும், ஆந்திர மாநிலம் கொத்தப்பட்டினம் அருகே கரை ஒதுங்கின. இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதையடுத்து, மீண்டும் அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் விசைப்படகின் எஞ்சின் திடீரென பழுதடைந்துள்ளது. இதுகுறித்து, அருகில் இருந்த மற்றொரு விசைப்படகிற்கு கடந்த 3-ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அந்த 9 மீனவர்களையும் தொடர்புகொள்ள முடியாமல் போனது.

    இதனால், அதிர்ச்சியடைந்த மீனவர்களின் குடும்பத்தினர், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் மூலமாகவும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

    இதற்கிடையே, ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே 7 மீனவர்களின் உடல்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கின. அவர்கள் தமிழக மீனவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.

    எஞ்சி இருந்த மீனவர்களான ராஜேஷ் மற்றும் நாராயணன் ஆகியோரின் நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் அவர்களைத் தேடும் பணியை கடலோரக் காவல் படையினர் தீவிரப்படுத்தினர். இந்நிலையில், ஆந்திர மாநிலம், கொத்தப்பட்டினம் அருகே உள்ள லட்சுமிபுரம் கடற்கரையோரம் மேலும் இரண்டு மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின.

    அந்த உடல்களை மீட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அவை மாயமான மீனவர்களான ராஜேஷ், நாராயணன் ஆகியோரின் உடல்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அந்த உடல்கள், ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்று ஆந்திர கடல் பகுதியில் மாயமான 9 மீனவர்களின் உடல்களும் சடலங்களாக மீட்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

  • பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு விவகாரம்: பொது நூலகத்துறை இயக்குநர் மாற்றம்

    பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு விவகாரம்: பொது நூலகத்துறை இயக்குநர் மாற்றம்

    பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், பொது நூலக இயக்குநராக இருந்த ஜெயந்தி ஐஏஎஸ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    அதாவது, பெரியார் அறிவுலக நூலகத்திற்கு ’அகல் விளக்கு பதிப்பகம்’ என்ற பதிப்பகத்தில் இருந்து பல லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வழக்கமாக 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களின் விலை சுமார் ரூ.1,395 கொடுத்து வாங்கி இருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டி இருந்தார்.

    இதனைத் தொடர்ந்து, பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், இந்த நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான குழு கடந்த திமுக ஆட்சியில், நவம்பர் மாதம் அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம், திமுக தரப்பிலும் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது நூலகத்துறை இயக்குநர் ஜெயந்தி ஐஏஎஸ்-ஐ மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதில், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக உள்ள ஜெயந்தி ஐஏஎஸ், பொது நூலகத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், ஜெயந்தி ஐஏஎஸ் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நூலகத்துறை இயக்குநர் பதவி திரும்பப் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து, பொது நூலகத்துறையின் புதிய இயக்குநராக ஷஜீவனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அதேவேளையில், ஜெயந்தி ஐஏஎஸ் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் அறிவுலகத்தில் புத்தகக் கொள்முதல் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், பொது நூலகத்துறை இயக்குநர் பொறுப்பில் செய்யப்பட்டுள்ள இந்த நிர்வாக மாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

  • வெற்றி மடிக்கணினி திட்டத்திற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் விஜய் உத்தரவு

    வெற்றி மடிக்கணினி திட்டத்திற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் விஜய் உத்தரவு

    கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வெற்றி மடிக்கணினித் திட்டத்தை செயல்படுத்த ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    அதனைத் தொடர்ந்து, இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்கான நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், “வெற்றி மடிக்கணினித் திட்டத்தின் மூலம் 2026-2027-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ (ITI), மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை மற்றும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்விப் பிரிவுகளில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு (UG) மற்றும் பட்டயப்படிப்பு (Diploma) மாணாக்கர்கள் பயனடைவார்கள்.

    தொடர்ந்து, பொறியியல் மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வித் தேவைகளை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு Intel Core i5 அல்லது அதற்கு இணையான உயர்தரத் தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினிகள் வழங்கப்படும்.

    இன்றைய அதிவேக டிஜிட்டல் யுகத்தில், அடித்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் உலகளாவிய போட்டித் திறன்களில் சிறந்து விளங்கவும், வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த “வெற்றி மடிக்கணினித் திட்டம்” ஒரு மாபெரும் மைல்கல்லாக அமையும் என்பது திண்ணம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • ‘எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பாடம் தேவையில்லை’ – சோனியா காந்தி ஆவேசம்

    ‘எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பாடம் தேவையில்லை’ – சோனியா காந்தி ஆவேசம்

    அரசியல் வெற்றிக்காக எங்களுக்கு ஆர்எஸ்எஸ் பாடம் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘Belonging: A Journey of Love’ வெளியீட்டிற்கு முன்னதாக, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் அவர், ‘கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் கட்டமைப்பு, ஜனநாயகம், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி பெற்ற அரசு நிறுவனங்கள் கடுமையாக சீரழிக்கப்பட்டுள்ளன’ என குற்றம்சாட்டினார்.

    மேலும், ‘இந்த அரசு பதவியில் இருந்து விலகினாலும் கூட, சிதைக்கப்பட்ட நமது அரசு அமைப்புகளை மீண்டும் சீரமைப்பதற்கு நீண்ட காலமும், அரசியல் கட்சிகளின் கடுமையான உழைப்பும் தேவைப்படும்’ என்றும் அவர் எச்சரித்தார்.

    மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் பாதிப்புகளை தற்போது உணர தொடங்கியுள்ளதால், மக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தியும் அமைதியின்மையும் நிலவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    காங்கிரஸ் கட்சியின் பின்னடைவு மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த சோனியா காந்தி, ‘பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சமமான அரசியல் களம் வழங்கப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்’ என்று கூறினார்.

    அரசு நிறுவனங்களின் மீதான முழுமையான பிடி, தேர்தல் ஆணையத்தின் மீதான ஆதிக்கம், ஊடகக் கட்டுப்பாடு, பண பலம் மற்றும் மதவெறி பிரச்சாரம் ஆகியவற்றின் மூலமே தற்போதைய ஆட்சி எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    1975-1977 ஆண்டுகளில் அமலில் இருந்த நெருக்கடி நிலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘வன்முறை சம்பவங்கள், அரசு அலுவலகங்களுக்கு தீவைப்பு போன்ற அசாதாரண சூழலை கட்டுப்படுத்தவே அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முயன்றார். அவரே பின்னர் 1977 மார்ச் மாதத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தலை அறிவித்து, நிகழ்ந்த தவறுகளுக்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். ஆனால், மோடி தலைமையிலான ஆட்சி நெருக்கடி நிலை காலத்தை விட மிக மோசமாக உள்ளது’ என்றார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் எழுச்சி குறித்து கேட்ட போது, ‘அவர் முற்றிலும் மாறுபட்டதொரு கருத்தியல் உலகத்தில் இருந்து வந்தவர் என்பது உண்மை தான்’ என்று சோனியா காந்தி கூறினார். இருப்பினும், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போன்ற தலைவர்கள் தங்களது அசாத்திய உழைப்பால் உயர்ந்து சாதனை படைத்துள்ளதை சுட்டிக் காட்டிய அவர், ‘அரசியலில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் இருந்து எந்தப் பாடமும் கற்கத் தேவையில்லை’ என்று திட்டவட்டமாகக் கூறினார்.

    காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு வழிகளில் பழிவாங்கல்களையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட போதிலும், அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை காக்க தொடர்ந்து கிராமப்புறங்கள் வரை போராடி வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

    அண்மைக்காலமாக நடந்த தேர்தல்களில் நடந்த முறைகேடுகள் குறித்து மக்கள் உணர்ந்துள்ளதாகவும், ஒத்த கருத்துடைய பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைத்து வருவதால், தங்களது அரசியல் எதிர்காலம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் நாளுக்கு நாள் பிரகாசமாகி வருவதாகவும் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

  • தீபாவளி பட்டாசு தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் – அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர மருத்துவ குழு தயார்

    தீபாவளி பட்டாசு தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் – அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர மருத்துவ குழு தயார்

    சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 10 படுக்கையுடன் 24 மணி நேரமும் மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளதாக குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுத்துறை தலைவர் சங்கரபாரதி தெரிவித்துள்ளார்.

    தீவாவளிப் பண்டிகையின் போது பட்டாசு வெடித்து ஏதேனும் தீக்காயம் ஏற்பட்டால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    நாடு முழுவதும் நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி என்றாலே நிச்சயம் பட்டாசு இருக்கும். அந்நாளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வார்கள்.

    இது போன்ற கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனையடுத்து, பட்டாசு வெடித்து ஏற்படும் தீக்காயங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அந்த வகையில், சென்னையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    24 மணி நேரமும் மருத்துவக் குழு

    சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 10 படுக்கையுடன் 24 மணி நேரமும் மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளதாக குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுத்துறை தலைவர் சங்கரபாரதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், “விபத்துகளை தவிர்க்க குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் அருகில் இருக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை கையாள வேண்டும். 24 மணி நேரமும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் தீக்காய விபத்துகளில் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காயங்களின் தன்மையை பொறுத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

    Special wards to treat burns

    தீபாவளி பட்டாசு வெடிப்பு – கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன? (ETV Bharat Tamil Nadu)

    தீக்காயத்தை உடனடியாக நீரில் கழுவ வேண்டும்

    சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீக்காய உயர் சிகிச்சைப் பிரிவில் 25 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தீக்காய விபத்து சிகிச்சை பிரிவின் இணை பேராசிரியர் தேன்மாெழி கூறும் போது, ”கடந்தாண்டு தீபாவளியின் போது 67 பேர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்தாண்டு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வார்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், பிளாஸ்டிக் சர்ஜரியுடன் சிறப்பாக சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.

    தீக்காயம் ஏற்பட்டால் குழாய் நீரில் காயம்பட்ட இடத்தை கழுவ வேண்டும். காயத்தின் மீது மஞ்சள், கரி, மாவு போன்ற எந்தப்பொருளையும் போடக் கூடாது. காயத்தை கழுவி விட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்” என்றார்.

     

  • இனி எந்த வயதிலும் சட்ட படிப்பு படிக்கலாம்: இந்திய பார் கவுன்சில்

    இனி எந்த வயதிலும் சட்ட படிப்பு படிக்கலாம்: இந்திய பார் கவுன்சில்

    இந்திய பார் கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, இனி எந்த வயதை சேர்ந்தவர்களும் வயது வரம்பின்றி சட்ட படிப்பில் சேர்ந்து படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பிற்கு 20 வயதும், 3 ஆண்டு சட்டப் படிப்பிற்கு 30 வயதும் அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து 2016-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஓஎம்ஆர் சாலையில் அரசு பேருந்து மீது தனியார் வேன் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

    ஓஎம்ஆர் சாலையில் அரசு பேருந்து மீது தனியார் வேன் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

    ஓஎம்ஆர் சாலை​யில் மாடு குறுக்கே வந்​த​தால், தனி​யார் தொழிற்​சாலை வேன் மற்​றும் அரசுப் பேருந்து ஆகியவை மோதிக் கொண்ட விபத்​தில் 2 பெண்​கள் உயி​ரிழந்​தனர்; 9 பேர் காயமடைந்​தனர்.

    கல்​பாக்​கம் அரு​கில் உள்ள பல்​வேறு கிராமங்​களை சேர்ந்த 13 பெண்​களை ஏற்​றிக்​ கொண்​டு, தனி​யார் தொழிற்​சாலை​யின் வேன் ஒன்று ஓஎம்​ஆர் சாலை​யில் கேளம்​பாக்​கம் நோக்​கிச் சென்று கொண்​டிருந்​தது.

    பையனூரில் சாலை​யின் குறுக்கே மாடு வந்​த​தால் ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த வேன் எதிர் திசை​யில் மாமல்​லபுரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்​பட்டு வேனில் பயணம் செய்த கூவத்​தூர் அடை​யாளச்​சேரியை சேர்ந்த ஜெயலட்​சுமி (40), கல்​பாக்​கம் அடுத்த பெரு​மாள்​சேரியை துர்​காலட்​சுமி (34) ஆகியோர் உயி​ரிழந்​தனர்.

    தகவல் அறிந்த மாமல்​லபுரம் போலீ​ஸார், காயமடைந்த ஐஸ்​வர்​யா(25) என்ற பெண்ணை அம்​மாபேட்டை தனி​யார் மருத்​து​வ​மனை​யில் மிக​வும் கவலைக்​கிட​மான நிலை​யில் சிகிச்​சைக்​காக சேர்த்​தனர்.

    லேசான காயமடைந்த 9 பெண்​கள் செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வ​மனைக்கு சிகிச்​சைக்​காக அனுப்​பப்​பட்​டனர். இந்த விபத்து குறித்​து, மாமல்​லபுரம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்.

    ஓஎம்​ஆர் சாலை​யில் கால்​நடைகள் அதி​கள​வில் சுற்​றித்​திரிந்து வரு​கின்​றன.இதனால் வாகன விபத்​துக்​குள் ஏற்​படு​கின்றன. எனவே சாலைகளில் சுற்​றித்​திரி​யும்கால்​நடைகளின் உரிமை​யாளர்​கள் மீதுகடும்​ நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​ என மக்கள்​ கோரிக்​கை விடுத்​துள்​ளனர்​.