இந்தியாவில் மட்டும் ‘ஜெயிலர் 2’ வசூல் ரூ.500 கோடியை கடந்து சாதனை

Written by

in

ரஜினியின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜெயிலர் 2’ படம் இந்திய அளவில் ரூ.500 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘ஜெயிலர் 2’. இந்தப் படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில், இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

படத்தின் 15-வது நாளில் ரூ.5.99 கோடி வசூலாகி இருக்கும் நிலையில் ‘ஜெயிலர் 2’ படம் இந்தியாவில் மட்டும் மொத்த வசூலாக ரூ.502.65 கோடியும், நிகர வசூலாக ரூ.429.55 கோடியும் வசூல் செய்துள்ளது.

15-வது நாளில் வெளிநாட்டுகளில் ரூ.2 கோடி வசூலாகி இருக்கும் நிலையில், வெளிநாடுகளில் மட்டும் படம் ரூ.264 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ‘ஜெயிலர் 2’ படத்தின் மொத்த வசூல் ரூ.766.65 கோடியை கடந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன், ரம்யா கிருஷ்​ணன், நமோ நாராயணன், சுராஜ் வெஞ்​சரமூடு, யோகி பாபு, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா உள்​ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன், மோகன்லால், சிவ ராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்டோர் கவுரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர். படத்​துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *