டெல்லியில் SCO மெகா கலாச்சார மாநாடு: பாகிஸ்தான் அமைச்சருக்கு அழைப்பு விடுத்த இந்தியா

Written by

in

SCO அமைப்பின் முதலாவது ‘நாகரிக உரையாடல் அரங்கு’ எதிர்வரும் நவம்பர் 20 முதல் 22 வரை புதுடெல்லியில் இந்தியாநடத்தவுள்ளது. புரானா கிலா கோட்டையில் நடைபெறும் இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடிமுறைப்படி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநாட்டிற்கு SCO அமைப்பின் 10 உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஔரங்கசீப் கான் கிச்சிக்கு இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பியுள்ளது. எனினும், மாநாட்டில் பாகிஸ்தான் சார்பில் யார் பங்கேற்பார்கள் என்பதை அந்நாடு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஒருவேளை அமைச்சர் ஔரங்கசீப் இதில் பங்கேற்றால், கடந்த 2023-இல் கோவாவில் நடைபெற்ற SCO வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு பிறகு இந்தியாவிற்கு வரும் முதல் பாகிஸ்தான் அமைச்சர் இவராவார்.

கலாச்சார ராஜதந்திரமும், தொன்மைப் பாரம்பரியமும்

மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் இணைந்து இந்த 3 நாள் சர்வதேச மாநாட்டை ஒருங்கிணைக்கின்றன.

SCO உறுப்பு நாடுகள் (ரஷ்யா, சீனா, ஈரான், பெலாரஸ் உட்பட), பார்வையாளர் நாடுகள் மற்றும் கூட்டாண்மை நாடுகளிலிருந்து 25-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

கடந்த 2025-இல் டியான்ஜினில் நடைபெற்ற SCO உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியால்முன்மொழியப்பட்ட இத்திட்டம், தற்போது டெல்லியில் செயல்படுகின்றது.

வரலாற்றுப் பூர்வமான நாகரிகத் தொடர்புகள், கல்வி, பாரம்பரிய அறிவு அமைப்புகள் மற்றும் மக்கள் இடையேயான கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதே இம்மாநாட்டின் முதன்மை நோக்கமாகும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *