முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை

இந்​திய கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடையே நடை​பெற்ற 5 டி 20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரை இந்​திய அணி 3-2 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது.

டி 20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 5 ஆட்​டங்​கள் கொண்ட ஒருநாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் மோதுகின்​றன. இந்​தத் தொடரின் முதல் ஆட்​டம் இன்று காலை 7.30 மணிக்கு ஆக்லாந்​தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்த தொடரை இரு அணிகளுமே 2027-ம் ஆண்டு நடை​பெற உள்ள ஒருநாள் கிரிக்​கெட் உல​கக் கோப்​பைத் தொடருக்​காக தயார் செய்து​கொள்​வதற்கு பயன்​படுத்​திக் கொள்​ளக்​கூடும்.

டி20 போட்​டிகளில் பேட்​டிங்​குக்கு சாதக​மாக இருந்த ஈடன் பார்க் ஆடுகளம், ஒருநாள் போட்​டி​யில் மாறு​பட்ட தன்​மையுடன் இருக்கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த மைதானத்​தில் பந்துகள் அதிக வேகத்​துடனும், நல்ல பவுன்​ஸுடனும் எழும்​பும். ஏனெனில் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்​துக்கு அடுத்​த​படியாக அதிக பவுன்ஸ் கொண்ட ஆடுகளங்​களில் ஒன்​றாக ஈடன் பார்க் கருதப்​படு​கிறது.

இந்த மைதானத்​தில் அதி​கபட்ச ஒருநாள் ஸ்கோராக 2007-ம் ஆண்டு பதிவான 340 ரன்​களே நீடிக்​கிறது. கடைசி​யாக இங்கு நடை​பெற்ற 2 ஒருநாள் போட்​டிகளில், முதலில் பேட் செய்த அணிகள் முறையே 150 மற்​றும் 76 ரன்​களுக்கு ஆட்டமிழந்துள்ளன. இத​னால் ஆடுகளத்​தில் பேட்​டிங், பந்​து​வீச்சு என இரண்​டுக்​கும் சமமான வாய்ப்பு கிடைக்​கலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அடுத்த ஆண்டு நடை​பெறவுள்ள ஒருநாள் கிரிக்​கெட் உல​கக் கோப்​பைத் தொடருக்கு முன்​பாக இந்​திய அணி​யின் வீரர்​களின் ஆட்​டத்​திறனை மதிப்​பிட இந்​தத் தொடர் உதவும். குறிப்​பாக, ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஆட்​டம் கவனத்தை ஈர்க்​கக்​கூடும். வேகப்​பந்து வீச்​சுக்கு சாதக​மான ஆடுகளங்​களில் இவர்​களின் செயல்​பாடு முக்​கியத்​து​வம் பெறக்​கூடும். இவர்களுடன் கேப்​டன் ஷுப்​மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், அக்​சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோ​ரும் பேட்​டிங்​கில் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வர்​களாக திகழ்கின்றனர்.

பேட்​டிங்​கில் இந்​திய அணி வலு​வாக இருக்​கும் நிலை​யில் பந்து வீச்​சில் அனுபவம் குறைந்த வீரர்​களே இடம் பெற்​றுள்​ளனர். இதனால் இந்​திய அணிக்கு ஒருநாள் போட்​டித் தொடர் சவாலாக அமையக்​கூடும்.டெஸ்ட் தொடரை கருத்​தில் கொண்ட முன்​னணி வேகப்​பந்து வீச்​சாளரான ஜஸ்பிரீத் பும்ரா ஒருநாள் போட்​டித் தொடரில் விளை​யாட​வில்லை. அதேவேளை​யில் ஹர்​திக் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா, ஹர்​ஷித் ராணா ஆகியோர் காயத்​தி​லிருந்து மீளவில்லை.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *