5 புதிய நாடுகளில் ஊழியர்களுக்கு ‘விருப்ப ஓய்வு’ திட்டத்தை விரிவாக்கிய கூகுள்

Written by

in

செயற்கை நுண்ணறிவுதுறையில் தங்களது முதலீடுகளையும் வளங்களையும் கணிசமாக அதிகரித்து வரும் வேளையில், செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கூகுள்நிறுவனம் தனது விருப்ப ஓய்வு திட்டத்தை மேலும் 5 நாடுகளுக்கு விரிவாக்கியுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கூகுள் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ள தகவலின்படி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இத்திட்டம் புதிதாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

AI முதலீடுகளும் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் பின்னணியும்

கூகுள் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கணினி துறைகளை தனது முதன்மை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டிலிருந்து அமெரிக்கா(US) மற்றும் பிரிட்டனில் (UK) உள்ள குறிப்பிட்ட பிரிவுகளுக்கு இவ்விருப்ப ஓய்வுத் திட்டம் வழங்கப்பட்டு வந்தது.

நிறுவனத்தின் தற்போதைய வேகத்துடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் ஒத்துப்போக விரும்பாத ஊழியர்கள் விருப்பத்துடன் வெளியேறுவதற்கான வாய்ப்பாக இத்திட்டத்தைக் கூகுள் நிர்வாகம் விவரித்துள்ளது.

AI மற்றும் கிளவுட் துறைகளில் பணி நியமனங்கள் தீவிரமாக நடைபெற்று வருவதால், கூகுளின் AI ஆராய்ச்சிகளுக்கான ‘டீப்மைண்ட்’ மற்றும் ‘கூகுள் கிளவுட்’ பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இத்திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

எக்சிட் பாக்கெட் & பணிக்கொடை விவரங்கள்

கடந்த ஜூன் மாத பாதியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை நடுப்பகுதி வரை அவகாசம் வழங்கப்பட்டு, ஆகஸ்ட் முதல் வெளியேற்ற நடைமுறைகள் தொடங்கின.

விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, அவர்கள் கூகுளில் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டிற்கும் 1 மாதச் சம்பளம் வீதம், அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் கூகுளின் முக்கியப் பொறியியல் மையம் உள்ளது. அங்கு மட்டும் பணியாற்றும் 5,000 ஊழியர்களில் பல பிரிவுகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

ஒருபுறம் விருப்ப ஓய்வு மூலம் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வந்தாலும், கூகுளின் ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த செப்டம்பர் நிலவரப்படி, கூகுளின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,04,757 ஆக உயர்ந்துள்ளது.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *