துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி எம்எல்ஏவுமான ரவிசங்கர் மீது முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நட்சத்திர விடுதியில் இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கோரிக்கை மனு அளிக்க வந்தவரை தாக்கிய புகாரில் சிக்கியுள்ள ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சர்ச்சைகளில் சிக்கும் எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கப்படவுள்ளது.

Leave a Reply