புத்தகக் கொள்முதல் ஊழல்: அகல் விளக்கு பதிப்பக வங்கி கணக்குகளை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்​தில் பொது நூல​கங்​களுக்​கான புத்​தகக் கொள்​முதல் ஊழல் தொடர்​பாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்​குப் பதி​ய​வும், அகல்​விளக்கு பதிப்​பகத்​தின் வங்கி கணக்​கு​களை முடக்​கவும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது.

நெல்லை கிருஷ்ணாபுரத்​தைச் சேர்ந்த ராமசுப்பு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: நூல​கங்​களுக்கு புத்​தகம் கொள்​முதல் தொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு 2024-ல் பல கட்​டுப்​பாடுகளை விதித்து உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவு அமல்​படுத்​தப்​பட​வில்லை.

இந்​நிலை​யில் தமிழகத்​தில் நூல​கங்​களுக்கு புத்​தகம் கொள்​முதல் செய்​ததில் மிகப்​பெரியளவில் முறைகேடு நடந்​திருப்​பது வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. இந்த முறைகேடு பெரியார் அறி​வுல​கத்​துக்​கான 2026-ம் ஆண்​டின் கொள்​முதல் உத்​தரவு​களு​டன் மட்​டும் இல்​லாமல் மதுரையில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு நூல​கம் வரை நீள்​கிறது. பல ஆண்​டுகளாக முறைகேடு நடை​பெற்று வரு​கிறது.

தவறிழைத்த அதி​காரி​கள் மற்​றும் மோசடி பதிப்​பாளர்​கள் மீது குற்​றவியல் நட​வடிக்கை எடுக்க சிபிஐ அல்​லது சிபி​சிஐடி விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனுவில் கூறப்​பட்​டிருந்​தது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *