ஜெம் வீரமணி மீது பாலியல் புகார் அளித்த சிறுமி முன்னிலையில் சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பு

ஜெம் வீரமணி பாலியல் வழக்​கில் பாதிக்​கப்​பட்ட சிறுமியை சிறைக்கு அழைத்​துச் சென்று சிறப்பு புலனாய்வுக் குழு போலீ​ஸார் அடை​யாள அணிவகுப்பை நடத்தி உள்​ளனர்.

சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் ஜெம் கிரானைட்ஸ் நிறு​வன உரிமையாளர் வீரமணி, அவருக்கு உடந்​தையாக இருந்​த​தாகக் கூறப்​படுவோர் என 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதில், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்​த​தாகப் பதிவு செய்​யப்​பட்ட வழக்​கில், வீரமணி மற்​றும் அவரது கார் ஓட்​டுநர்​கள் லாசர், பார்த்​திபன், பாபு ஆகியோ​ருக்கு தொடர்பு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

இந்த நிலை​யில், சிறுமியை புழல் மத்​திய சிறைக்கு அழைத்​துச் சென்ற சிறப்பு புலனாய்​வுக் குழு​வினர், நீதி​மன்ற நடைமுறைகளின்​படி அடை​யாள அணிவகுப்பை நடத்​தி​ய​தாக தகவல் வெளியாகி உள்​ளது. அப்​போது, தன்னை காரில் வீரமணி​யின் வீட்​டுக்கு அழைத்​துச் சென்ற ஓட்​டுநர்​களைச் சிறுமி அடை​யாளம் காட்​டிய​தாகக் கூறப்​படு​கிறது.

ஜான் பாண்டியன் இதனிடையே இந்த வழக்கில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனிடம் 2 மணி நேரம் விசாரணை

நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் அளித்த வாக்குமூலத்தின் பேரில், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

முன்னதாக பாலியல் விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், இருதரப்பு பிரச்சினைக்காக பேச்சுவார்த்தைக்கு சென்றதாகவும் ஜான் பாண்டியன் ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தார்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *